"கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது கொரோனா அலை" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

நகர்ப்புறங்களில் வீசிய கொரோனா அபாய அலை கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டதாகவும் அதை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கிராமப்புறங்களில் வீசத் தொடங்கி விட்டது கொரோனா அலை - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
x
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கட்டுக்கடங்காமல் போகும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க முடியாமல், முதலமைச்சர் பல்வேறு குழுக்களைப் போட்டு, அதிகாரிகளுக்குள்ளும், அமைச்சர்களுக்குள்ளும் பனிப்போர் ஏற்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் சென்னையில் தடுமாறி நிற்பது போன்ற நிலை, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உருவானால் மக்களுக்குப் பேராபத்தை ஏற்படுத்திவிடும் விடும் என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் என கூறியுள்ளார். இந்த நிலையில் கிராமப்புறங்களில் தொற்று பரவாமல் இருக்க, விழிப்புணர்வு,தேவையான மருத்துவக் கட்டமைப்பு, முன்னணி கள வீரர்களுக்குப் பாதுகாப்பு ஆகிய முக்கியமான மூன்றையும்  உறுதி செய்திட வேண்டும் அவர்  என வலியுறுத்தியுள்ளார். கிராமங்களில் பரவி வரும் கொரோனா குறித்து '32 தகவல்கள்' கோரி, மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம், திமுக மாவட்ட செயலாளர்கள் மனுக்கள் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்