தமிழக பா.ஜ.க. வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - நடிகைகள் கவுதமி, நமிதாவுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி

தமிழக பா.ஜ.க.வில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக பா.ஜ.க. வுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் - நடிகைகள் கவுதமி, நமிதாவுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பதவி
x
தமிழக பா.ஜ.க.வில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில துணைத் தலைவர்களாக நயினார் நாகேந்திரன்,வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்பட 10 பேரும், பொதுச் செயலாளர்களாக கே.டி.ராகவன் உள்பட நான்கு பேரும், செயலாளர்களாக 8 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, 
மாநில அளவிலானஅணிகள் மற்றும் பிரிவுகளுக்கான  தலைவர்களும், நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் பிரிவு தலைவராக பால்கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.  கலை கலாச்சார பிரிவு தலைவராக காயத்ரி ரகுராம், நடிகைகள் கவுதமி, நமிதா உள்ளிட்டோர் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெ​ரிவித்த பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன், சாத்தான்குளம் வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், துரிதமாக வழக்கை நடத்தி, சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 80 கோடி மக்கள் பயனடையும்  வகையில், நவம்பர் வரை கூடுதல் அரிசி, பருப்பு வழங்கும் ஒன்றரை  லட்சம் கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை  அறிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ. சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்