"குறித்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டது" - பிரதமர் மோடி

நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வரும் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
x
கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அவ்வப்போது மக்களிடம் பேசி வந்த பிரதமர் மோடி, இன்று 6 வது முறையாக மக்கள் மத்தியில் பேசினார். 

கொரோனாவுக்கு எதிராக போரிட்டு ஊரடங்கு தளர்வில் இரண்டாம் கட்டத்தில் அடியெடுத்து வைப்பதாக கூறினார். 

அதேநேரம் மக்கள் கூடுதல் விழிப்போடு இருக்க வேண்டும் என தான் கேட்டுக் கொள்வதாகவும், 

குறித்த நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் நாட்டில் லட்சக்கணக்கான மக்களின் உயிர் காப்பாற்றப்பட்டதாகவும், 

உரிய நேரத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கொரோனாவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் மோடி தெரிவித்தார். 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக ஒரு கிலோ பருப்பு மற்றும் 5 கிலோ கோதுமை அல்லது அரிசி உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும், இதற்காக 90000 கோடி ரூபாய் செலவழிக்கப்படுவதாகவும் மோடி தெரிவித்தார். 

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் மக்கள் தொடர்ந்து அஜாக்கிரதையாக பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருவதாகவும், 

இரண்டு அடி இடைவெளி மற்றும் முக கவசம் அணிவது போன்றவற்றை இனி வரும் நாட்களிலும் மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், 

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது எனவும் மோடி கூறினார். 

விவசாயிகளுக்கு அவர்களின் வங்கிக்கணக்கில் இதுவரை 18 ஆயிரம் கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்தார். 

உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியா நிலையாகவே உள்ளது
என கூறிய மோடி, 20 கோடி பேருக்கு ஜன் தன் வங்கி கணக்கின் பயன் வழங்கப்பட்டுள்ளது என்றார். 

கடந்த 3 மாதங்களில் மட்டும் ஜன் தன் வங்கிக் கணக்கில் நேரடியாக 31 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், 

வரும் நவம்பர் மாதம் வரை நாட்டில் உள்ள 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார். 

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்குவோம் என்றும் நாட்டு மக்களுக்கு மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்