சாத்தான்குளம் சம்பவம் : விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசிய காவலர்

சாத்தான்குளம் சம்பவம் குறித்த விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசிய புகார் தொடர்பாக காவல் உயரதிகாரிகள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் : விசாரணையின் போது நீதிபதியை அவதூறாக பேசிய காவலர்
x
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. நீதிவிசாரணையின் ஒரு பகுதியாக கோவில்பட்டி கீழமை நீதிமன்ற நீதிபதி சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினார். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் சி.பிரதாபன் ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது. 

அப்போது நீதிபதி கேட்ட ஆவணங்களை தர மறுத்ததோடு காவலர் மகாராஜன் என்பவர் நீதிபதியை தொடர்ந்து செல்போனில் படம் எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் காவலர் மகாராஜன் நீதிபதியை ஒருமையில் தரக்குறைவாக திட்டியதாகவும் நீதிபதி புகார் தெரிவித்தார். நீதிபதியின் புகாரின் பேரில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.  கூடுதல் கண்காணிப்பாளர் டி.குமார், துணை கண்காணிப்பாளர் பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர்  இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மூவரையும் பணியிடமாற்றம் செய்ய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சாத்தான் குளம் காவல்நிலையம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்