தமிழகத்தில் அதிகரிக்கும் நோய் பரவல்

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களை காட்டிலும் ஜூன் மாதத்தில் நோய் பரவல் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்திருப்பது, அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் நோய் பரவல்
x
சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை,வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 82 ஆயிரத்து 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 45 ஆயிரத்து 537 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 35 ஆயிரத்து 656 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பாதிப்பால் ஆயிரத்து 79 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களை காட்டிலும், கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு ஜூன் மாதத்தில் மிக மிக அதிகம் என சுகாதாரத்துறையின் அறிக்கை சொல்கிறது. மார்ச் மாத இறுதியில் ஒன்றாக இருந்த கொரோனா உயிரிழப்பு ஏப்ரல் மாதத்தில் 27 ஆகவும், மே மாத இறுதியில் 145ஆகவும் உயர்ந்து மொத்தம்173 ஆக இருந்தது. 
 
ஜூன் மாதம் ஆரம்ப முதல் தற்போது வரை மட்டும் 59 ஆயிரத்து 942 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 906 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஜூன் 19 முதல் 28 வரை பத்து நாட்களில் மட்டும் 452 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக சென்னையில் 809 பேரும், செங்கல்பட்டில் 80, திருவள்ளூர் 61, காஞ்சிபுரம் 19 என 4 மாவட்டங்களில் மட்டும் இதுவரை 969 பேர் இறந்துள்ளனர். இனி வரும் நாட்களில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என மருத்துவ குழு கணித்திருப்பதால் மாநில மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.   

Next Story

மேலும் செய்திகள்