"தமிழக முதலமைச்சர் இனியாவது தெரிந்து கொள்ளட்டும்" - மு.க.ஸ்டாலின்
பதிவு : ஜூன் 29, 2020, 07:24 AM
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பாக நான் சொன்ன ஆலோசனைகளை தமிழக முதலமைச்சர் இனிமேலாவது தெரிந்து கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர், அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனைகளை சொல்லவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக வலைதளங்களில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மார்ச் மாதம் 16 ஆம் தேதியில் இருந்து அரசுக்கு ஆலோசனைகளை சொல்லி வருகிறேன் என்றும், இதுவரை 50 க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். கொரோனா பரவல் அதிகமாகி வரும் சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனிமேலாவது எனது ஆலோசனைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுக்க வேண்டும் என்றும், அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிடவும், மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுக்க வேண்டும் என்றும், சித்த மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2177 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

605 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

360 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

157 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் - எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

36 views

செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

47 views

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் - 11,120 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

மருத்துவ முகாம் மூலம் மட்டும் 11 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

134 views

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.

186 views

அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா - தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

391 views

நேற்றிரவு முதல் இன்று காலை வரை சென்னையில் 22 பேர் உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை 22 பேர் கொரோனோ உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.