கூலிப்படை என நினைத்து போலீசாரை சுற்றி வளைத்த மக்கள் - பேச்சுவார்த்தைக்கு பின் போலீஸ் விடுவிப்பு

ராமநாதபுரத்தில் கூலிப்படை என நினைத்து போலீசார் பொதுமக்கள் சுற்றிவளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூலிப்படை என நினைத்து போலீசாரை சுற்றி வளைத்த மக்கள் - பேச்சுவார்த்தைக்கு பின் போலீஸ் விடுவிப்பு
x
ராமநாதபுரம் புலிக்காரா தெருவில் கடந்த 4 நாட்களுக்கு முன் இளைஞர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் மஃப்டியில் வந்தனர். அப்போது சூர்யா என்பவருக்கு பதிலாக அவரின் தம்பியை போலீசார் அழைத்துச் சென்றதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், வந்தவர்களை கூலிப்படை என நினைத்து சுற்றி வளைத்தனர். வாகனத்தை விரட்டிப்பிடித்து உள்ளே இருந்தவர்களை சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணை கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வந்து நடந்ததை விளக்கிய பிறகே பொதுமக்கள் போலீசாரை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்