பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 4 ரவுடிகள் கைது
பதிவு : ஜூன் 28, 2020, 08:25 AM
சென்னை பெரும்பாக்கத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, பெரும்பாக்கத்தில்  பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். பெரும்பாக்கம் அருகே அரசன்கழனியில் கடந்த 19ஆம் தேதி பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி உட்பட பலரைத் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அதேபாணியில் பெரும்பாக்கம் எழில் நகரில் கடந்த 5 ஆம் தேதி 20க்கும் மேற்பட்ட ரவுடி கும்பல் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி ஒருவருடைய பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். 

இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார்,  பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டவர்கள் கோட்டூர்புரம், அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு பகுதிகளை சேர்ந்த ரவுடிகள்  என்பதை கண்டறிந்தனர். இவர்கள்  மீது பள்ளிகரணை, சேலையூர், செம்மஞ்சேரி, நீலாங்கரை, ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது என தெரியவந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய, பெரும்பாக்கம் எழில் நகரை சேர்ந்த சிவனாந்தம், தினேஷ்குமார் , திவகர், சல்மான் ஆகியோரை  கைது செய்தனர். மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2166 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

593 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

352 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

154 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

91 views

பிற செய்திகள்

கொரோனா பணியில் ஈடுபட்ட காவலர்கள், மீண்டும் தங்களது சிறப்பு பிரிவு பணிக்கு செல்ல வேண்டும் - தமிழக டிஜிபி உத்தரவு

காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு கொரோனா கட்டுப்படுத்தும் பணிக்கு தமிழகம் முழுவதும் ஈடுபடுத்தப்பட்ட காவலர்களை, அவர்கள் வேலை பார்க்கும் சிறப்பு பிரிவில் மீண்டும் பணியை தொடர தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்

278 views

கொரோனா காலத்திலும் தொடரும் போதைப்பொருள் கடத்தல் - பார்சலில் ரூ.16 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு காலத்திலும் விமானத்தில் வரும் பார்சல்களில் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

12 views

கடலூர்: போலி வங்கி துவங்க திட்டம் - 3 பேர் கைது

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் போலி வங்கி துவங்க திட்டம் தீட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

18 views

போலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது

17 views

மனைவியை பார்க்க அனுமதிக்காததால் ஆத்திரம் - விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டவர் காவல் நிலையத்திலேயே, கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

88 views

சாத்தான்குளம் விவகாரம் - வரும் 28-ம் தேதி அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை

சாத்தான்குளம் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி மற்றும் சிபிஐ இரண்டு தரப்பிலும் அடுத்த விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.