மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க கோரி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பதில் மனு

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
மதுபானங்களை அதிக விலைக்கு விற்பதை தடுக்க கோரி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் பதில் மனு
x
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சேலம் மாவட்டம், ஜாரி கொண்டலாம்பட்டி  பஞ்சாயத்து  துணைத் தலைவர் குல்லு படையாச்சி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, டாஸ்மாக் நிர்வாகம் தாக்கல் செய்த பதில் மனுவில், மதுபான விலை விவரங்கள் அந்தந்த கடைகளில் முக்கியமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கடந்த ஓராண்டில் 9 ஆயிரத்து 319 வழக்குகள் கண்டறியப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் பதில் அளித்துள்ளது. டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தின் பதில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்