வீழும் வைரஸ்.. மீளும் தண்டையார்பேட்டை
பதிவு : ஜூன் 26, 2020, 04:12 PM
மாற்றம் : ஜூன் 26, 2020, 04:13 PM
சென்னை தண்டையார்பேட்டையில், தொடர்ந்து கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவது சென்னைவாசிகளிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தினந்தோறும் குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையில் தண்டையார்பேட்டை மண்டலம், தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த மூன்று வாரத்தில் 25 ஆம் தேதியான நேற்று, இதுவரை இல்லாத வகையில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்து 891 ஆக குறைந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 553 ஆக இருந்தது. நேற்று முன் தினம், அதாவது 24 ஆம் தேதி, கொரோனா தொற்று பாதிப்பு 2,373 ஆக இருந்தது. அதே சமயம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,896 ஆக இருந்தது. கடந்த 23 ஆம் தேதியன்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் கொரோனாவால் குணமடைந்தவர் எண்ணிக்கை, 2,796 ஆகவும், பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,347 ஆகவும் இருந்தது. இது குறித்து சமூக வலைத்தளமான டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கடந்த 3 வாரங்களில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை படிபடியாக குறைந்து ஐந்தாவது இடத்திற்கு செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று எண்ணிக்கை குறைவுக்கு, அங்கு இரவு பகலாக பணியாற்றி வரும் மருத்துவ குழுவிற்கு, பாராட்டுக்களை  தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

141 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

54 views

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

48 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

17 views

பிற செய்திகள்

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

21 views

"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

63 views

விவசாயிக மசோதாக்கள் விவகாரம்: "நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" - கமல்ஹாசன் எச்சரிக்கை

விவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

7 views

பெரியார் சிலை அவமதிப்பு : "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" - வைகோ கண்டனம்

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

35 views

"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்

திருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1318 views

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

223 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.