சாத்தான்குளம் சம்பவம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் மகன், தந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம் சம்பவம் : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
சாத்தான்குளத்தில் மகன், தந்தை உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். அப்போது அந்த பகுதியில் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவர்களை கைது செய்த போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவர்களை விடுவித்த போலீசார் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

இதேபோல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மின்கட்டண குளறுபடிகளை சரிசெய்யவும், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கண்டித்தும் பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடைபெற்றது. 

இதேபோல், சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று ஆட்சியர் அலுவலகம் அருகே மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் முகத்தில் கருப்பு நிற முக கவசம் அணிந்தும், கருப்புக்கொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்