சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் : உரிய நீதி வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உரிய நீதி வழங்கப்படும் என்றும், நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் : உரிய நீதி வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
x
கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உரிய  நீதி வழங்கப்படும் என்றும், நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம்  எனவும்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் உரிய  நீதி வழங்கப்படும் என்றும், நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம்  எனவும்  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது .இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக  இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மாவட்ட எஸ்.பி. தரப்பில் வழக்கு குறித்த நிலை அறிக்கை மின்னஞ்சல் வழியாக தாக்கல் செய்யப்பட்டது. காணொலி வழியாக ஆஜரான எஸ்.பி., தூத்துக்குடி பகுதியில் தற்போது ஓரளவு அமைதி திரும்பியுள்ளதாகவு​ம், நீதித்துறை நடுவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை காவலர் ஒருவர் அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். உடற்கூறு ஆய்வு முடிந்து அறிக்கை தயாராக உள்ள நிலையில், ஊரடங்கு காரணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இயலவில்லை என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள்,  கோவில்பட்டி நீதித்துறை நடுவர், கிளைச் சிறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய நிர்வாக பதிவேடுகள் மற்றும் மருத்துவ பதிவேடுகளை புகைப்படம் எடுக்கவும், வழக்கு தொடர்பான அனைத்து சி.சி.டி.வி. பதிவுகளையும் சேகரித்து பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டனர். இதேபோல ராஜா சிங் என்பவர் தாக்கப்பட்டது தொடர்பாக, மாவட்ட நீதிபதி விசாரித்து, தனியே நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள்  உத்தரவிட்டுள்ளனர்.நோய் தொற்று காலத்தில் காவலர்கள் மக்களிடம் நடந்து கொள்ளும் முறை தொடர்பாக மூன்றாம் முறையாக தற்போதும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இது மற்றொரு தொற்றுநோய் போல உள்ளதாக கருத்து தெரிவித்தனர். தற்போது  அனைவரும் அதிகமான மன அழுத்தத்திலேயே காணப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

போலீசார் கூடுதல் மன அழுத்தத்தில் காணப்படும் நிலையில், அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலமாக கவுன்சிலிங் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தன்மை செயலர், சட்டத்துறை செயலர் ஆகிய உயர் அதிகாரிகளை கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு காவலர்களுக்கான  வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படும் என அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறினார்.  இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள், வன்முறையை தூண்டும் விதத்தில் செய்திகள் பரப்பப்படுவதாகவும், அதனை ஒவ்வொருவரும் தவிர்க்க முயல வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.  இந்த வழக்கில் உரிய  நீதி வழங்கப்படும் என்றும், நீதிமன்றத்தை யாரும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூன் 30-​க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

Next Story

மேலும் செய்திகள்