பேரூராட்சி வளாகத்தில் 2 ஏக்கரில் திராட்சைத் தோட்டம் - அந்தியூர் பேரூராட்சி ஊழியர்கள் புதிய முயற்சி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி வளாகத்தில் ஊழியர்களால் சுமார் 2 ஏக்கரில் திராட்சைத் தோட்டம் அமைக்கப்பட்டது.
பேரூராட்சி வளாகத்தில் 2 ஏக்கரில் திராட்சைத் தோட்டம் - அந்தியூர் பேரூராட்சி ஊழியர்கள் புதிய முயற்சி
x
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி வளாகத்தில் ஊழியர்களால் சுமார் 2 ஏக்கரில் திராட்சைத் தோட்டம் அமைக்கப்பட்டது. இங்கு ஓசூரில் இருந்து  வரவழைக்கப்பட்ட 300 திராட்சை செடிகளை, ஊழியர்கள் நட்டனர். இயற்கை உரம், மண்புழு உரம், செம்மண் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு இயற்கை முறையில் திராட்சை செடி வளர்க்கப்பட உள்ளதாக, பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி காலி இடத்தின் மற்றொரு பகுதியில், ஆடாதோடா கரிசலாங்கண்ணி, துளசி கண்டங்கத்திரி, உள்ளிட்ட மூலிகைச் செடிகளும் ஓரிரு நாளில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்