தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை - விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வந்தவாசி, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளுர், ஆரணி, உள்ளிட்ட பல பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளில் நீர் மட்டம் உயரும் என்பதால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வியாழக்கிழமை மாலை திருவண்ணாமலை நகரிலும் கனமழை பெய்தது.

4 மணி நேரத்திற்கு மேலாக கனமழை - சூறாவளி காற்றால் மின்தடை

ஈரோட்டில் நேற்று மாலை திடீரென சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் மழை பொழிய தொடங்கியது.  தொடர்ந்து 4 மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியதால் வெப்பம் தணிந்து ஈரோடு குளிர்ந்தது. மழை பெய்ததால் வீரப்பன்சத்திரம், சூளை, கருங்கல்பாளையம், பிரப்ரோடு, ஆர்.கே.வி.ரோடு, பெருந்துறை ரோடு, கொல்லம்பாளையம், சூரம்பட்டி வலசு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. 

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை  விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் சாலைகளில் ஆறாக பெருக்கெடுத்து ஒடியது. மழை காரணமாக ஒசூரில் நிலவிய வெப்பம் தணிந்து குளிர்ச்சியானது. மேலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெங்களூருவில் கொட்டி தீர்த்த கனமழை - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால்  நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள். மழை நீருடன் கழிவு நீர் கலந்து கால்வாயில் ஒடியது. ஆறுகளிலும் வெள்ளம் போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

Next Story

மேலும் செய்திகள்