கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கோவிபார் ஊசி - 3 வாரங்களில் 1,00,000 குப்பிகள் தயாரிக்க இலக்கு

கொரோனா தொற்றுக்கு ஊசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க கோவிபார் ஊசி - 3 வாரங்களில் 1,00,000 குப்பிகள் தயாரிக்க இலக்கு
x
ஐதராபாத்தை சேர்ந்த ஹெட்டோரோ என்ற நிறுவனம் தயாரித்துள்ள அந்த மருந்தின் விலை ஐந்தாயிரத்து 400 ரூபாய். முதல் கட்டமாக 20 ஆயிரம் குப்பிகள் தயாரிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் தான் இந்த ஊசி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த 2 அல்லது 3 வாரத்தில் ஒரு லட்சம் குப்பிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஊசியை சர்க்கரை, நுரையீரல் மற்றும் சிறுநீரக  பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்