வேலூரில் வேகமெடுக்கும் கொரோனா - "ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா"

வேலூரில் ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேலூரில் வேகமெடுக்கும் கொரோனா - ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா
x
வேலூரில் ஒரே நாளில் 68 பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 888  ஆக உயர்ந்துள்ளது. இதில்  65 பேர் நேதாஜி மார்க்கெட்டோடு தொடர்புடையவர்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த மார்க்கெட் பகுதியில்  உள்ள அரிசி மண்டி உரிமையாளர் ஒருவரின் குடும்பத்தில் அனைவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதேபோல், சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்