திருமணத்திற்கு சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா - திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைப்பு

கும்பகோணத்தில் நடந்த திருமணத்திற்கு சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருமணத்திற்கு சென்னையில் இருந்து வந்தவருக்கு கொரோனா - திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைப்பு
x
 கும்பகோணத்தில் பிரபல திருமண மண்டபத்தில்  நடந்த திருமண விழாவிற்காக சென்னையில் இருந்து 6 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு சோதனைச் சாவடியில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒருவருக்கு  கொரோனா தொற்று  இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவர் கலந்து கொண்ட திருமண மண்டபத்திற்கு சீல்  வைக்கப்பட்டது.  இந்நிலையில் திருமணத்தில் பங்கேற்ற கும்பகோணத்தை சேர்ந்த 250 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால்  பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இந்நிலையில் திருமண மண்டப உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்