சட்ட விரோத இ.பாஸ் வழங்கப்பட்ட விவகாரம் - நாள் ஒன்றுக்கு 100 இ- பாஸ் என இலக்கு வைத்து விற்பனை

சட்ட விரோத இ.பாஸ் விவகாரத்தில், கைதான அரசு ஊழியர்கள் இருவரை, காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சட்ட விரோத இ.பாஸ் வழங்கப்பட்ட விவகாரம் - நாள் ஒன்றுக்கு 100 இ- பாஸ் என இலக்கு வைத்து விற்பனை
x
வருவாய் ஆய்வாளர் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் உதயகுமார் மற்றும் குமரன் உள்ளிட்ட 5 பேர், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார்  நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 ஆயிரம் ரூபாய்க்கு விலை நிர்ணயம் செய்து, நாளொன்றுக்கு நூறு இ.பாஸ் விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து, மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததுள்ளது.  கடந்த  ஒன்றரை மாதங்களுக்கு மேலாக, பல்லாயிரக்கணக்கானோருக்கு இபாஸ் சட்டவிரோதமாக வினியோகம் செய்யப்பட்டதும் அம்பலமாகியுள்ளது. இதில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார்,சிறையில் உள்ள உதயகுமார் மற்றும் குமரனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்