சாத்தான்குளம் சம்பவம்: தந்தை ,மகன் உடல்கள் நல்லடக்கம் - வியாபாரிகள் உடலுக்கு கனிமொழி அஞ்சலி

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாத்தான்குளம் சம்பவம்: தந்தை ,மகன் உடல்கள் நல்லடக்கம் -  வியாபாரிகள் உடலுக்கு கனிமொழி அஞ்சலி
x
கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர்  உடல்கள், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள், சாத்தான்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலையில் ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் உடல்கள்  மேல சாத்தான்குளத்தில் உள்ள சி.எஸ்.ஐ தேவாலய கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  அவர்களது உறவினர்களும் , வணிகர்களும் ஏராளமாக திரண்டு அவர்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடற்கூறு ஆய்வு முடிவதற்கு முன்பே, அவர்கள் நோயின் காரணமாக உயிரிழந்தனர் என முதலமைச்சர் அறிவித்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக, தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள், ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உடலுக்கு முன்னதாக அவர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, முதல்வரின் இந்த கூற்றால் வழக்கு விசாரணை திசை திரும்பி விடக்கூடாது என்றார். இதுபோல் லாக்கப் இறப்பு சம்பவம் இனிமேல் தமிழ்நாட்டில் எப்போதும் நடைபெறக் கூடாது என்றும் கனிமொழி வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்