சொத்து முடக்கத்தை எதிர்த்து நிதி நிறுவன அதிபர் வழக்கு - வருமான வரித் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சசிகலாவின் பினாமி என்ற பெயரில், சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து நிதி நிறுவன உரிமையாளர் தாக்கல் செய்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க, வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்து முடக்கத்தை எதிர்த்து நிதி நிறுவன அதிபர் வழக்கு - வருமான வரித் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
x
சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலில் ஒரு கடையையும், 11,000 சதுர அடி நிலத்தையும் சிட்ஃபண்ட் உரிமையாளர் வி.எஸ்.ஜே. தினகரன் என்பவர் வாங்கி உள்ளார். இந்நிலையில், 2017 ம் ஆண்டு சசிகலா வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். தினகரன், ஸ்பெக்ட்ரம் மாலில் உள்ள சொத்துக்களை 18 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாகவும், அதற்கு ஈடாக பணமதிப்பு இழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை பெற்றதாகவும் வருமான வரித் துறை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், தினகரனை சசிகலாவின் பினாமி எனக் கூறி, அவருக்கு சொந்தமான சொத்துக்களை முடக்கம் செய்து வருமான வரித் துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்க கோரியும் தினகரன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், 2 வாரங்களில் அனைத்து ஆவணங்களுடன் விரிவாக பதிலளிக்க வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.Next Story

மேலும் செய்திகள்