கள்ளக்காதல் விவகாரம்- மகளை கொன்ற தாய் : சென்னை சேவியர் அருணின் தொடர் கொலைகள் அம்பலம்

திருப்பூரில் கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மகளை, கள்ளக் காதலன் மற்றும் தம்பியுடன் சேர்ந்து தாயே கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்தது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமாகியுள்ளது.
கள்ளக்காதல் விவகாரம்- மகளை கொன்ற தாய் : சென்னை சேவியர் அருணின் தொடர் கொலைகள் அம்பலம்
x
திருப்பூரில் கள்ளக்காதலை தெரிந்துகொண்ட மகளை, கள்ளக் காதலன் மற்றும் தம்பியுடன் சேர்ந்து தாயே கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்தது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அம்பலமாகியுள்ளது. எஸ்தர் பேபி என்பவர் தனது கணவனை பிரிந்து பெற்றோருடன் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் வசித்து வந்தார். அப்போது, தாய்க்கும், பாக்கியராஜ் என்பவருடன் கள்ள தொடர்பு இருந்துள்ளது. இதுதொடர்பான சண்டையில், தம்பியும், சென்னையில் ரவுடியுமான சேவியர் அருணை வரவழைத்த தாய் சகாயராணி, கள்ளக் காதலன் பாக்கியராஜ் மூவரும் எஸ்தர் பேபியை கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்துள்ளனர். தந்தை அளித்த புகாரின் பேரில், சேவியர் அருணை விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து, 2014-ல் எஸ்தர் பேபியை புதைத்த இடத்தில் இருந்து எலும்புக் கூடுகளை எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்