கொரோனா ஊரடங்கு காலத்தில் போ​லீசாரால் 15 பேர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் : தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் அறிக்கை அளிக்க உத்தரவு

கொரோனா ஊரடங்கு காலத்தில், காவல் துறையினரால் 15 பேர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் போ​லீசாரால் 15 பேர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் : தமிழகம் உட்பட 8 மாநிலங்கள் அறிக்கை அளிக்க உத்தரவு
x
கொரோனா ஊரடங்கு காலத்தில், காவல் துறையினரால்15 பேர்  அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் அறிக்கை கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோன பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு காலத்தில், 8 மாநிலங்களில் 15 பேர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் 12 பேர் சாலைகளிலும், 3 பேர் சிறையிலும் அடித்துக் கொல்லப்பட்டு உள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு அமைப்பு புகார் அளித்துள்ளது. ஆந்திராவில் 5 பேரும், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா 2 பேரும், தமிழகம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா ஒருவரும் போலீசாரால் உயிரிழந்து உள்ளனர். 
இதுதொடர்பாக, தமிழகம் உள்பட 8 மாநிலங்களி​டம், தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. நாட்டில் கடந்த 2018-19 ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்து 497 பேர் நீதிமன்ற காவலிலும், 178 பேர் காவல் நிலையத்திலும், 386 போலீசாரை தாக்க முயன்றதான  பெயரில் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை மொத்தம் நான்காயிரத்து 608 சம்பவங்கள்  விசாரிக்கப்பட்டு உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்