முதலமைச்சர் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் - அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்பு

கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
x
இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, காவல்துறை ஆணையாளர் சுமித் சரண், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில், கோவை அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவ குழுவினர் மற்றும் covid-19 வைரஸ் தொற்று சிகிச்சை அளிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவ குழுவினர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.  கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தற்போது முதலமைச்சர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்