தனிமைப்படுத்தியோரின் அத்தியாவசிய தேவை - தேவையை பூர்த்தி செய்ய பணியாளர்கள் நியமனம்

சென்னையில், தனிமைப்படுத்தியோரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கள பணியாளர்களை நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
தனிமைப்படுத்தியோரின் அத்தியாவசிய தேவை - தேவையை பூர்த்தி செய்ய பணியாளர்கள் நியமனம்
x
சென்னையில், கடும் வீரியத்துடன் கொரோன தொற்று பரவி வருகிறது. 15 மண்டலத்திலும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்நிலையில், அறிகுறியே இல்லாமல், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அவர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்து, வெளியே வருவதை தடுக்கும் வகையில் 15 மண்டலத்துக்கும், மூவாயிரத்து 500 களப்பணியாளர்களை மாநகராட்சி நியமித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்