மான் வேட்டையாடிய 4 பேர் கைது - தலா ரூ 25,000 அபராதம் விதிப்பு

முதுமலையில் மான் வேட்டையாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மான் வேட்டையாடிய 4 பேர் கைது  - தலா ரூ 25,000 அபராதம் விதிப்பு
x
நீலகிரி மாவட்டம் , போஸ்போரா கிராமம் அருகே மான் இறைச்சி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் போலீசார் போஸ்போரா கிராமத்திற்கு செல்லும் வழியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மான் இறைச்சி எடுத்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்