இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யுங்கள்" - யு.ஜி.சி. அமைத்த நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை

பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு, பல்கலைக் கழக மானியக் குழுவின் நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யுங்கள் - யு.ஜி.சி. அமைத்த நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை
x
பல்கலைக் கழகங்களில் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்யுமாறு, பல்கலைக் கழக மானியக் குழுவின் நிபுணர் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதுதொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அரியானா பல்கலைக் கழக  துணைவேந்தர் தலைமையிலான நிபுணர் குழு இந்த பரிந்துரையை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்யவும் பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு மிக அதிகமாக  உள்ள நிலையில் தேர்வுகளை நடத்தினால் உடல்நல பிரச்சினை உருவாகும் என நிபுணர் குழு எச்சரித்துள்ளது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சியை ஏற்றுக் கொள்ளாத மாணவர்கள், மீண்டும் தேர்வுகளை எழுத அவர்களுக்கு முழு அனுமதி வழங்கவும் நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. 
பல்கலைக் கழகங்களில் புதுமுக வகுப்புகளை, அக்டோபருக்கு முன்பாக தொடங்க  வேண்டாம் எனவும் அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்