தமிழகத்தில் மேலும் 2,865 பேருக்கு கொரோனா - இன்று 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2 ஆயிரத்து 424 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 763 ஆக உயர்ந்து உள்ளது.


சென்னையில் இன்று 1,654 பேருக்கு கொரோனா,  உயிரிழப்பு - 668

சென்னையில் மேலும் ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 814 ஆக உள்ள நிலையில் , சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 673ஆக உள்ளது. இதுவரை 26 ஆயிரத்து 472 பேர் குணமடைந்து உள்ளனர். சென்னையில் கொரோனாவால் 668 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்