"அப்பாவி மக்களின் உயிர் பறிக்கும் செயல்களை தவிர்த்து விடுங்கள்" - காவல்துறையினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

அப்பாவி மக்களின் உயிர் பறித்து குற்றவாளிகளாகும் செயல்களை தவிர்த்து விடுங்கள் என்று காவல்துறையினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்பாவி மக்களின் உயிர் பறிக்கும் செயல்களை தவிர்த்து விடுங்கள் - காவல்துறையினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
x
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தையும், மகனும்  கடுமையாக தாக்கப்பட்டு, உயிரிழந்துள்ள சம்பவம் அனைவருடைய நெஞ்சத்தையும் உறைய  வைத்துள்ளதாக திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சென்னை ஆவடி அருகே வேலைக்கு சென்ற மின்வாரிய ஊழியர் தனது அடையாள அட்டையை  காட்டியதையும் ஏற்காமல், அவரை  காவல் துறையினர் சரமாரியாக  தாக்கியதை சமூக வலைதளங்களில்  பார்க்க முடிந்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மருத்துவ பணிகளுக்காக செல்பவர்கள் கூட காவல் துறையினரின் நெருக்கடிக்கு உள்ளாகின்ற செய்திகள் வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினர் கடமையினை சரியாக செய்யுங்கள், அதற்கு பொதுமக்கள் எப்போதும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்றும்  ஸ்டாலின் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்