கீழடியில் 6ஆம் கட்ட ஆய்வு - தண்ணீர் கூஜா கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில், அழகிய வடிவமைப்பு கொண்ட தண்ணீர் கூஜா கண்டெடுக்கப்பட்டது தமிழரின் பண்பாட்டு நாகரீகத்துக்கு வலு சேர்த்துள்ளது.
கீழடியில் 6ஆம் கட்ட ஆய்வு - தண்ணீர் கூஜா கண்டெடுப்பு
x
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. அங்குள்ள கொந்தகையில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு செய்த ஆய்வில்,13 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில், மூன்று முதுமக்கள் தாழிகளில் எலும்புகள், மண்டை ஓடுகள், பானைகள் உள்ளிட்டவை மரபணு ஆய்வுக்காக மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பபட்டுள்ளன. வேறு இடத்தில் புதைத்தவர்களின் எலும்புகளை எடுத்து வந்து இங்கு புதைத்துள்ளதும், புதைக்கும் போது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை சேர்த்து புதைத்ததும் தெரியவந்துள்ளது. அவ்வாறு புதைக்கப்பட்ட சுமார் 2 லிட்டர் அளவுள்ள அழகிய வடிவமைப்புடன் கூடிய தண்ணீர் கூஜா கிடைத்துள்ளது. குவிந்த வாய் பகுதி, கழுத்து, விரிந்த உட்பகுதி உள்ள இந்த கூஜாவின் வெளிப்புறத்தில், வெண்ணிற வண்ணப் பூச்சு உள்ளது. மூலிகை பூச்சாக இருக்கும் என கூறப்படுகிறது. அகரத்தில், தங்க நாணயம் மற்றும் பானை உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் கிடைத்துள்ளன. கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய நான்கு இடங்களிலும் பண்டைய பொருட்கள் கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்