கீழே விழுந்து பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு - உடல் அடக்கம் முடிந்தபின் கொரோனா இருப்பது தெரிய வந்தது

சென்னை தாம்பரம் அருகே உடல் அடக்கம் முடிந்தபின் கொரோனா இருப்பது தெரிய வந்ததால், இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
கீழே விழுந்து பாதிக்கப்பட்டவர் உயிரிழப்பு - உடல் அடக்கம் முடிந்தபின் கொரோனா இருப்பது தெரிய வந்தது
x
தாம்பரம் அடுத்த முடிச்சூர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த 57 வயதான முதியவர், கடந்த 18ஆம் தேதி கால்வாய்க்குள் விழுந்து காயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மூளையில் ரத்த அழுத்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் முடிச்சூரில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், இறுதி சடங்கு நடந்து முடிந்த பிறகு, இறந்த சுப்பிரமணியனுக்கு கொரோனா தொற்று இருந்ததாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம்  தகவல் கூறியுள்ளது. இதனால், இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட அப்பகுதியினர், பீதியில் உள்ளனர். அவரது குடும்பத்தினருக்கும் இதுவரை கொரோனா தொற்று சோதனை செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்