உசிலம்பட்டியிலும் எதிரொலித்த முழு ஊரடங்கு - வெறிச்சோடிய உசிலம்பட்டி பேருந்து நிலையம்

மதுரை, தேனி மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது புறநகர் பகுதியான உசிலம்பட்டியிலும் எதிரொலித்தது.
உசிலம்பட்டியிலும் எதிரொலித்த முழு ஊரடங்கு - வெறிச்சோடிய உசிலம்பட்டி பேருந்து நிலையம்
x
மதுரை, தேனி மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கானது, புறநகர் பகுதியான உசிலம்பட்டியிலும் எதிரொலித்தது. மதுரை புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, பேரையூர் பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், வழக்கம் போல் அங்கு பேருந்துகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பேருந்துகளும் இயங்கி வருகின்றன. ஆனால், தினந்தோறும் மதுரைக்கு வியாபார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் சென்று வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தற்போது, முழு ஊரடங்கு காரணமாக மதுரைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், உசிலம்பட்டி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. பயணிகள் யாரும் வராததால், பேருந்துகளும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்