மருத்துவமனையில் உயர்கல்வித்துறை அமைச்சர் - முடிவு எடுக்க தெரியாமல் அதிகாரிகள் தவிப்பு

தமிழக அமைச்சர் அன்பழகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , உயர்கல்வித்துறையில் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன.
மருத்துவமனையில் உயர்கல்வித்துறை அமைச்சர் - முடிவு எடுக்க தெரியாமல் அதிகாரிகள் தவிப்பு
x
உயர்கல்வித்துறை சார்ந்த பணிகள் பெரும் தேக்கம் அடைந்திருக்கின்றன. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, கல்வியாண்டு இந்நேரம் துவங்கி இருக்க வேண்டும் . ஆனால் பள்ளி , கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், தேர்வுகளும் நடத்தப்படாத நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளன.
அந்தத் துறையின் முதன்மைச் செயலாளர் அபூர்வா நீண்ட விடுமுறையில் சென்றுள்ளார். இதன் காரணமாக பொறியியல், கலை அறிவியல் கல்லூரி உட்பட பல்வேறு விவகாரங்களில் என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் அதிகாரிகள் தவித்து வருகின்றனர். கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடக்கும் என்று தெரியாத நிலை உள்ளது.  Iமத்திய பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு , முந்தைய தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளன. இது போன்ற மாநிலங்களை பின்பற்றி தமிழக அரசும் உரிய முடிவை எடுக்க வேண்டும் என்பது கல்வியாளர்களின் கருத்தாகும்

Next Story

மேலும் செய்திகள்