போலி இ-பாஸ் பயன்படுத்தி 5 மாநிலத்தை கடந்து வந்த பேருந்து - ராஜஸ்தானில் இருந்து வந்த பேருந்தை சிறைபிடித்த போலீசார்

போலி இ-பாஸ் பயன்படுத்தி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களை தடுக்க மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
போலி இ-பாஸ் பயன்படுத்தி 5 மாநிலத்தை கடந்து வந்த பேருந்து - ராஜஸ்தானில் இருந்து வந்த பேருந்தை சிறைபிடித்த போலீசார்
x
போலி இ-பாஸ் பயன்படுத்தி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருபவர்களை தடுக்க  மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அதிகாலை கோவை கருமத்தம்பட்டி சோதனை சாவடியில் அதிகாரிகள்  வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த சொகுசு பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அவர்கள் பயன்படுத்தி வந்த இ- பாஸ் போலியானது என்பது தெரிய வந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 5  மாநிலங்களை கடந்து வந்த பேருந்தில் பயணம் செய்த  30 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பேருந்தை பறிமுதல் செய்த கருமத்தம்பட்டி போசீலார் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்