"100நாள் வேலை திட்டத்தில் சுமார் ரூ.10கோடி முறைகேடு" - சமூக தணிக்கை குழு அறிக்கையால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில், சுமார் 10கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சமூக தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
100நாள் வேலை திட்டத்தில் சுமார் ரூ.10கோடி முறைகேடு - சமூக தணிக்கை குழு அறிக்கையால் பரபரப்பு
x
திருவண்ணாமலை மாவட்டத்தில், நூறு நாள் வேலை திட்டத்தில், சுமார் 10கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக சமூக தணிக்கை குழு அறிக்கை அளித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரணியில், கிழக்கு ஊராட்சி ஓன்றியம் மேற்கு ஆரணி ஓன்றிய என 2 ஊராட்சி ஓன்றியங்கள் உள்ளன. இதில் உள்ள 75 கிராம பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி வேலை திட்டம் நடைபெற்று வருகின்றன. பணிதள பொறுப்பாளர்கள் நியமித்து ஏரி தூர்வாரும் பணி, நீர்வரத்து கால்வாய் சீரமைத்தல், ஏரி மதகு அமைத்தல், மண்புழு உரம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மேற்கு ஆரணி ஓன்றியத்தில் உள்ள 37 கிராமங்களில், கடந்த
3 ஆண்டுகளில் சுமார் 10கோடி ரூபாய் முறைகேடு நடந்து இருப்பதாக சமூக தணிக்கை குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்