வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - முன்னாள் ஐ.ஜி.யின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஜி ஜெகநாதனின் குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு - முன்னாள் ஐ.ஜி.யின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவு
x
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஜி ஜெகநாதனின்  குடும்ப சொத்துக்களை பறிமுதல் செய்ய  உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் சரக டிஐஜி ஆக பணியாற்றிய அவர் , கடந்த 2001 ஆம் ஆண்டு ஓய்வு பெற்று  மனித உரிமை ஆணையத்தில் 
ஐஜியாக பணியாற்றினார். அவர் வருமானத்திற்கு அதிகமாக 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த  வழக்கை விசாரித்த மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் ஜெகநாதனுக்கு  3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது.  இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்