"தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு" - தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழு ஊரடங்கு - தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவிப்பு
x
தேனி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை குறைக்கும்  பொருட்டு தேனி, பெரிய குளம், போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளில்  இன்று மாலை 6 மணி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் அறிவித்துள்ளார். கட்டுப்பாடு பகுதிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் எவ்வித தளர்வுமின்றி முழுமையாக தொடரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேனி மாவட்டத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு பேருந்துக்கள் இயக்கப்படாது என்றும் கம்பம்-பழனி மற்றும் கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் தற்போது இயங்கும் பேருந்துக்களின் எண்ணிக்கையில் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்