வெள்ளை அறிக்கை கோரும் ஸ்டாலின்

கொரோனா தடுப்பு மருந்து மற்றும் கருவிகள் கொள்முதல் குறித்து, அரசு, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
வெள்ளை அறிக்கை கோரும் ஸ்டாலின்
x
கொரோனா தடுப்பு மருந்து மற்றும் கருவிகள் கொள்முதல் குறித்து, அரசு, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

*  சீனாவிடம் வாங்கிய ரேபிட் கிட் முறைகேடு விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், பிகே.58பி என்ற 'தெர்மல் ஸ்கேனர்' கொள்முதல் விவகாரம் வெளியாவதாக கூறியுள்ளார். 

*ஆன்லைன் மூலம் ஆயிரத்து 500 முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை தரமான தெர்மல் ஸ்கேனர்களை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் வாங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,  

* ஒரே மாதிரியான அளவீட்டை காட்டும் கருவிகளால், களப் பணியாளர்கள் குழம்பி உள்ளதாகவும் பரிசோதனை செய்யாவிட்டாலும், பெயரளவுக்கேனும் தெர்மல் ஸ்கேனரை கையில் வைத்துக் கொள்ளுமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
 
* தவறுகளையும், ஆலோசனைகளையும் ஏற்று திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல், எதிர்க்கட்சி அரசியல் செய்வதாக கூறி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவும் சாடியுள்ளார்.

* வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதாக கூறும் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது சொந்த மாவட்டத்துக்கு வாங்கிய மாஸ்க், ஸ்பிரேயர், தெர்மல் கருவி ஆகியவை அதிக விலைக்கு வாங்கியதாகவும்  

* இதனால், கந்தர்வக்கோட்டை பகுதி ஊராட்சி தலைவர்கள், சரியான பில் கோரியிருப்பதாகவும், கறம்பக்குடி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பலர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளித்து உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

* பேரிடர் காலத்திலும், மரண விளையாட்டு ஆடுவதை நிறுத்தி, வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்கள் நலன் காக்கும் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார் 


Next Story

மேலும் செய்திகள்