செஞ்சியை கலக்கும் கல்யாண மன்னன் - அடுத்தடுத்து 3 பெண்களை மணமுடித்த பலே ஆசாமி
பதிவு : ஜூன் 23, 2020, 08:58 AM
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அடுத்தடுத்து 3 பெண்களை மனைவியாக்கி கல்யாண மன்னனாக உலா வருகிறார்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த துத்திப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். 30 வயதான இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன் அதே ஊரை சேர்ந்த வெண்ணிலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. சில மாதங்கள் மட்டுமே மனைவியுடன் குடும்பம் நடத்திய வெங்கடேசன், 8 மாத கர்ப்பமாக உள்ள தன் மனைவியை உதறிவிட்டு கோவைக்கு நடையை கட்டினார் அவர். 

பின்னர் கோவைக்கு சென்ற வெங்கடேசன், அங்கே நந்தினி என்ற பெண்ணை காதலித்து ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்துள்ளார். வேலை பார்த்துக் கொண்டே படித்து வந்த நந்தினியுடன் 4 ஆண்டு காலம் குடும்பம் நடத்தியுள்ளார் வெங்கடேசன். பின்னர் அவருடனான வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் கசந்து போகவே அங்கிருந்து தன் ஜாகையை சென்னைக்கு மாற்றியிருக்கிறார். தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக பந்தா காட்டி செவிலியரான பெண்ணை தன் வலையில் விழ வைத்துள்ளார் வெங்கடேசன். கோவிலம்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த அந்த காளீஸ்வரி என்ற அவரை காதலித்து 3வதாக திருமணம் செய்தார் வெங்கடேசன். இதெல்லாம் முதல் மனைவியான வெண்ணிலாவுக்கு தெரியவரவே அதிர்ந்து போனார் அவர். 

3வது மனைவியான காளீஸ்வரியை தொடர்பு கொண்டு நடந்ததை கூறியிருக்கிறார் முதல் மனைவியான வெண்ணிலா. ஆனால் அவர் சொன்னதை எல்லாம் நம்பாமல் வாழ்ந்தால் வெங்கடேசனுடன் தான் என பிடிவாதமாக இருந்துள்ளார் காளீஸ்வரி. தன் கணவரின் இந்த மோசடித்தனத்தால் அதிர்ந்து போன வெண்ணிலா, செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மாற்றுத் திறனாளியான பெண் பிள்ளையை கையில் சுமந்து கொண்டு தன் வாழ்க்கைக்கு நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார் வெண்ணிலா

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2105 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

451 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

270 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

அதிமுக ஐவர் குழு திடீர் ஆலோசனை

அதிமுகவுக்குள் நிர்வாக ரீதியாக செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வைத்தியலிங்கம், கேபி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் அடங்கிய ஐவர் குழு திடீர் ஆலோசனையில் ஈடுபட்டது.

7037 views

மதுரை : வாக்களிக்காதவர்களை துன்புறுத்தும் ஊராட்சி மன்ற தலைவர்?

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாவட்டம் செம்பியேனந்தல் ஊராட்சி மன்ற தலைவராக இந்திரா அழகுமலை என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

868 views

ஒரு கோடியை கடந்த கொரானா வைரஸ் பரிசோதனை - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1 கோடிக்கும் அதிகமான சோதனைகளை மேற்கொண்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

155 views

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இன்று மேலும் ஆயிரத்து 747 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

35 views

தமிழகத்தில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு - மேலும் 3,827 பேருக்கு கொரோனா உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 978 ஆக உயர்ந்து உள்ளது.

18 views

"பாதுகாப்பான முறையில் மீன் விற்க நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னையில் பாதுகாப்பான முறையில் மீன் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.