கொரோனா தொற்றை தடுப்பதற்குரிய 10 அம்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சண்முகம்

கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் நிலையில் அதனைத் தடுப்பதற்குரிய 10 அம்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றை தடுப்பதற்குரிய 10 அம்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - தலைமைச் செயலாளர் சண்முகம்
x
நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படும் பகுதிகளை தீவிரமாகக் கண்டறிந்து அந்தப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றினை முன்பே கண்டறியும் வகையில், காய்ச்சல் முகாம்களை நடத்த வேண்டும் என்றும் நோய்த் தொற்றுக்கான காரணிகளை அலசி ஆராய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

நோய்த் தொற்று பாதிப்புக்குள்ளான தெருக்கள் அல்லது உள்ளூர் குடியிருப்புகளில் 100 சதவீதம் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில்  நோய்த் தொற்று ஏற்படும் சூழல் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடி நீர் மற்றும் ஜிங்க் மாத்திரைகளை வழங்கலாம் என்றும்

முகக் கவசங்கள் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு  அத்தியாவசியப் பொருள்களை தன்னார்வலர்கள் மூலமாக அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பிற மாநிலங்கள், நாடுகள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் அவர்களை வீடுகளில் 14 நாள்களில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் செயற்கை சுவாசக் கருவிகளைக் கொண்ட படுக்கைகளை மருத்துவமனைகளில் ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்