ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா
ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்எல்ஏவான கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 366 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் எக்ஸ்ரே டெக்னிசியன், தனியார் மருத்துவர் உள்ளிட்டோருக்கு கொரோனா பரவி வந்தது. இந்த நிலையில் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக எம்எல்ஏவான கார்த்திகேயன் அவரது மனைவி மற்றும் மகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் 65 வயதான அவரது தாய்க்கும் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
Next Story
