பெட்ரோல் விலை உயர்வு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதாக, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல் விலை உயர்வு - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருவதாக, மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும், பெட்ரோல் 30 ரூபாய்க்கும், டீசல் 25 ரூபாய்க்கும் விற்பனை செய்ய வேண்டும் எனவும் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
"மக்களின் மனநிலை உணர்ந்து அரசு செயல்படவில்லை" - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு
ராமநாதபுரத்தில், அரண்மனை முன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மாவட்ட செயலாளர் முருக பூபதி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சாட்டினர். மக்களின் மனநிலை உணர்ந்து அரசு செயல்படவில்லை என்றும் முழக்கங்களை எழுப்பினர்
திருமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்டோர் கைது
மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். சமூக இடைவெளியுடன் நடந்து வந்து, திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசு பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Next Story

