சூரிய கிரகணம் - திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் நடை அடைப்பு
நாளை சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை சாற்றப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாளை சூரிய கிரகணம் ஏற்படுவதையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை சாற்றப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக பக்தர்களின் அனுமதியின்றி கோயில்களில் பூஜைகள் மட்டும் நடைபெற்று வரும் நிலையில், நாளை
காலை 7 மணிக்குள் அனைத்து பூஜைகளை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சூரிய கிரகணம் நிறைவு பெற்ற பின்னர் பிற்பகல் 1.45 மணிக்கு நடை திறக்கப்பட்டு ,உச்சிக்கால பூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story

