கீழடி ஆறாம் கட்ட ஆய்வில் இணைப்பு குழாய் பானைகள் கண்டுபிடிப்பு - தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல்
கீழடி ஆறாம் கட்ட ஆய்வில், கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல இணைப்பு குழாயாக பானைகள் பயன்டுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீழடி ஆறாம் கட்ட ஆய்வில், கால்வாய் வழியாக தண்ணீரை கொண்டு செல்ல இணைப்பு குழாயாக பானைகள் பயன்டுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வில் இதுவரை ஏழு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, கிடைக்கப்பட்டுள்ள பானைகள் இணைப்பு குழாய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வாய்க்கால்களின் முடிவிலும் தொடக்கத்திலும், மிகவும் உறுதியான வெவ்வேறு வடிவிலான பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தண்ணீர் போன்ற திரவத்தை திசை திருப்ப இது வடிவமைக்கப்பட்டிருக்கலாம் எனவும் இது குறித்த விரிவான முழுமையான தகவல்கள் மத்திய தொல்லியல் துறையின் 3 கட்ட ஆய்வறிக்கை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

