நாகர்கோவில் காசியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை - காசியின் பெற்றோரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார்
நாகர்கோவில் காசியின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் 3 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
சமூக வலைத்தளங்களில் உள்ள பெண்களை குறிவைத்து அவர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்கில் நாகர்கோவில் காசி கைது செய்யப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் காசியின் நண்பர் டேசன் ஜினோவிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இதனிடையே காசியின் பெற்றோரிடம் 3 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் காசியுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இன்றுடன் காசியின் போலீஸ் காவல் முடிய உள்ள நிலையில் மேலும் காவலை நீட்டிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

