காலாவதியான சத்து மாத்திரைகளை வீடு வீடாக விநியோகித்த செவிலியர்கள்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் காலாவதியான சத்து மாத்திரைகளை சுகாதார ஊழியர்கள் விநியோகம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலாவதியான சத்து மாத்திரைகளை வீடு வீடாக விநியோகித்த செவிலியர்கள்
x
சோளிங்கர் 4-ஆவது வார்டில் செவிலியர் ஒருவர் கொரோனா உறுதியானது. இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த ஐந்து வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக சத்து மாத்திரைகள் சுகாதாரத்துறை சார்பில் வழங்கப்பட்டது. ஆனால் இந்த மாத்திரைகள் காலாவதியாகி இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள் தாங்கள் வழங்கிய சத்து மாத்திரைகளை திரும்பப் பெற்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்