மறைந்த பாலமுரளிக்கு சென்னையில் காவல்துறையினர் அஞ்சலி
கொரோனா தொற்றால் மரணமடைந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
கொரோனா தொற்றால் மரணமடைந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளிக்கு தமிழகம் முழுவதும் காவல்துறையினர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி உத்தரவுப்படி சென்னையில் மாநகர காவல் ஆணையர் அலுவலகம், பால முரளி பணியாற்றிய மாம்பலம் காவல் நிலையம் மற்றும் மெரீனா கடற்கரை காந்தி சிலை அருகே காவல்துறையினர் பாலமுரளிக்கு மௌனஅஞ்சலி செலுத்தினர். சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Next Story

