சிதம்பரம் நடராஜர் கோயிலில் நாளை ஆனி திருமஞ்சன விழா பொதுமக்களுக்கு அனுமதியில்லை - ஆட்சியர் உத்தரவு.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழாவில், குறைவான தீட்சிதர்களை மட்டும் வைத்து, நடத்திக் கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
நாளை திருமஞ்சன விழா நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ள அனுமதி இல்லை என ஆட்சியர் கூறியுள்ளார். கோயிலின் மேற்கு, வடக்கு, தெற்கு வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டு, கிழக்குக் கோபுர வாயில் வழியாக மட்டுமே தீட்சிதர்கள் சென்றுவர அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். தீட்சிதர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்துவதுடன் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
Next Story

