கோவையில் காரில் 4 கிலோ கஞ்சா கடத்தல் - முன்னாள் அதிமுக பெண் நிர்வாகி கைது
கோவையில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கோவை வடவள்ளி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கோவையில் கஞ்சா கடத்தப்படுவதாக, போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, கோவை வடவள்ளி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த காரில் போலி சிஐடி அதிகாரி அடையாள அட்டை இருப்பதும், காரில் 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காரில் வந்த திருப்பூர் அவிநாசியை சேர்ந்த முன்னாள் அதிமுக மகளிரணி நிர்வாகி ஜெயமணி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story

