எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு - தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், தமக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதை எதிர்த்து, ராம்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அதில் அனிதா ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவில் படித்த ஆண்டு, வழக்கு விவரங்களை குறிப்பிடவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை நிராகரிக்க கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் தள்ளுபடி செய்தார்.
Next Story

