சென்னையில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா - ஆம்புலன்சில் ஏற மறுத்த 51 வயது நபர்

தஞ்சை மாவட்டம் முருக்கன் குடி பகுதியை சேர்ந்த 51 வயது நபர் கடந்த சில தினங்கள் முன்பு தாம்பரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று திரும்பியுள்ளார்.
சென்னையில் இருந்து திரும்பியவருக்கு கொரோனா - ஆம்புலன்சில் ஏற மறுத்த 51 வயது நபர்
x
தஞ்சை மாவட்டம் முருக்கன் குடி பகுதியை சேர்ந்த 51 வயது நபர் கடந்த சில தினங்கள் முன்பு தாம்பரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று திரும்பியுள்ளார். காரில் வந்த அவருக்கு அணைக்கரை சோதனை சாவடியில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது. தொற்று உறுதியான நிலையில்,  சுகாதாரத் துறையினர் அவரை தஞ்சை மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்சில் ஏற கேட்டுக் கொண்டுள்ளனர். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன் என ஆம்புலன்சில் ஏற மறுத்த அவரை, மணிக்கணக்கில் சுகாதாரத் துறையினர் கெஞ்சி அவரை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்